மாண்டியாவில் ஊரடங்கு வாபஸ்: மைசூர் ரயில்கள் தொடர்ந்து ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்ச நீதிமன்றத்தின் கடும் உத்தரவால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதைவிளக்கவும் அது குறித்து விவாதிக்கவும் அவசர சட்டமன்றக் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வர் கிருஷ்ணா மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைவரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. இதையடுத்து வரும் 11ம் தேதியே இந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தை நடத்தகிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.

காவிரி விஷயத்தில் பாத யாத்திரை நடத்தி தான் மட்டும் அரசியல் லாபம் ஈட்ட முயன்றதாகக் கருதும் எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் கிருஷ்ணா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன.

இதனால் சட்டசபையைக் கூட்டி அனைத்துக் கட்சிகளையும் இந்த விவாதத்தில் பங்கேற்க வைத்து தனது அரசுக்குஆதரவு திரட்ட கிருஷ்ணா முயல்வதாகத் தெரிகிறது.

மாண்டியா ஊரடங்கு வாபஸ்:

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து மாண்டியாவில் நடந்து வந்த வன்முறைகள் ஓரளவுக்குஓய்ந்துவிட்டதால் கடந்த 3 நாட்களாக அங்கு அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில் முதல்வர் கிருஷ்ணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் 15ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதால் அதுவரைமாண்டியாவில் 144 பிரிவின்படி தடையுத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டியாவில் உள்ள முதல்வர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

ஆனால், மாண்டியாவிலும் மைசூரிலும் ரயில்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுதால் சென்னைமற்றும் தஞ்சாவூரிலிருந்து மைசூர் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் தொடர்ந்து பெங்களூர் ரயில்நிலையத்துடன் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், சென்னை சென்டிரல்-மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்,தஞ்சாவூர்-மைசூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி-மைசூர் பாஸட் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் இன்றும் பெங்களூருடன்நிறுத்தப்பட்டுவிடும்.

தொடர்ந்து ரயில்கள் ரத்தாகிவிட்டதால் மைசூருக்குப் போக வேண்டிய தமிழக பயணகளும் தமிழகம் வரும்மைசூர் தமிழர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தீபாவளியையொட்டி சொந்த ஊருக்குச் செல்வதில்இப் பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாண்டியாவிலும், மைசூரிலும் தொடர்ந்து தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.மத்திய ரிசர்வ் போலீசாரும் மாநில அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+