வேகமாய் நிரம்பி வரும் தமிழக அணைக் கட்டுகள்
மதுரை:
கடும் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைக்கட்டுகளிலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மதுரை வைகை அணையிலும் பெரியார் அணையிலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
மேட்டூரில்...
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் தொடர்ந்து காவிரியில் நீரைத் திறந்துவிட்டு வருகிறது. இதனால்மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி (சனிக்கிழமை) மேட்டூரில் நீர் மட்டம் 56.86 அடியாக உயர்ந்தது. அணையின் கொள்ளளவு நீர் மட்டம்120 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 23,396 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,163 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகத்தில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி தான் திறந்துவிடப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் மழையால் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டுள்ளது.
பெரியாறு அணை:
கேரள மாநிலத்தை ஒட்டிய பெரியார் அணையில் நீர் மட்டம் இன்று 119 அடியாக உயர்ந்தது. இந்த அணைக் கட்டின் அதிகபட்சகொள்ளவு 136 அடி தான். அணைக்கு வினாடிக்கு 2,254 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
வைகை அணை:
அதே போல பலத்த மழையால் மதுரை வைகை அணையில் நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. அணையில் இன்று நீர்மட்டம் 51.20 அடியாக உள்ளது. நேற்றிரவு முழுவதும் மதுரை மாவட்டத்தில் கன மழை பெய்தது.
இதனால் அணைக்கு வினாடிக்கு 178 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி நீர்மட்டுமே திறந்துவிடப்பட்டு வருகிறது.
மழையளவு:
பெரியார் அணைக்கட்டின் நீர் பிடிப்புப் பகுதியில் 24 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேக்கடியில் 15 மி.மீயும், ஊட்டியில் 5மி.மீயும், கூடலூரில் 8 மி.மீயும், வீரபாண்டியில் 6.5 மி.மீயும், பேரணையில் 10.02 மி.மீயும், மஞ்சளாறு பகுதியில் 8 மி.மீயும்மதுரையில் 16 மி.மீயும் மழை பெய்தது.
மதுரையின் சாலைகள் முழுவதும் நீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையின் பல இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications