திமுகவுடன் மதிமுக இணையாது: வைகோ
சென்னை:
திமுகவுடன் மதிமுக இணையும் பேச்சே எழவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
சமீபத்தில் திமுக தலைவர்கள் துரைமுருகன் தலைமையில் வேலூர் சிறைக்குச் சென்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோவைச் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு அவர்கள்கருணாநிதியின் சார்பில் வைகோவுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வைகோ பிடி கொடுத்து ஏதும் பேசவில்லை என்று தெரிகிறது. இந் நிலையில் திமுகவில் மதிமுகஇணையலாம் என்ற பேச்சு பலப்பட்டு வருகிறது.
இதையடுத்து தனது கட்சியின் அவைத தலைவர் எல்.கணேசன் மூலமாக வைகோ ஒரு விளக்க அறிக்கைவெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாது:
சமீபத்தில் வேலூர் சிறைக்குச் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், வைகோவை சந்தித்துப் பேசியதுமரியாதை நிமித்தமே.
மருத்துவமனையில் இருந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனை மதிமுக தலைவர்கள் சந்தித்து நலம்விசாரித்தனர். முன்பொரு முறையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாறனை வைகோவே நேரில்சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
தற்போதும் விரைவில் குணம் பெற வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
இந்தச் செயல்களைத் தொடர்ந்து தான் ஒரு மரியாதை நிமித்தமாக துரைமுருகன் வைகோவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது கட்சிகள் இணைப்பு குறித்தோ அல்லது வேறு எந்த அரசியல் பேச்சுமோநடைபெறவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி, வைகோவை சென்று சந்தித்தாலும் கூட அந்த சந்திப்பின்போது கட்சிகள் இணைப்புகுறித்தோ அல்லது வேறு எந்த அரசியல் பேச்சுவார்த்தைகளோ இருக்காது.
இதை வைகோ திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பழிவாங்கப்பட்ட டி.எஸ்.பி:
இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி உள்ளிட்ட8 அதிகாரிகள் டெல்லி திகார் சிறைச்சாலைப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைகோ மீதான வழக்கு விசாரணையில் ஆளும்கட்சியின் நிர்பந்தங்களுக்கு அடி பணியாததால் கியூ பிராஞ்ச்டி.எஸ்.பி. மகேந்திரன் மீது முதல்வர் ஜெயலலிதா கடுப்பில் இருந்தார்.
இதையடுத்து மகேந்திரனையும் மேலும் 8 அதிகாரிகளையும் கியூ பிராஞ்ச் பணியில் இருந்து மாற்ற தமிழக அரசுமுடிவு செய்தது. இவர்களை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் போடுவார்கள் என்று தான்கருதப்பட்டு வந்தது.
ஆனால், இந்த 9 பேரையும் டெல்லி திகார் சிறைச்சாலைப் பாதுகாப்புப் பணியில் ஜெயலலிதா நியமித்துள்ளார்.திகார் சிறையைப் பாதுகாத்து வரும் தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தப் பணியில் சேர விருப்பம் இல்லாத டி.எஸ்.பி. மகேந்திரன் உடல் நலம் சரியில்லை என்று கூறிநீண்டவிடுப்பில் சென்று விட்டார் என்று தெரிகிறது.
வைகோ குறித்த விசாரணையை மெதுவாக நடத்துமாறு அவருக்கு நெருக்குதல் வந்ததாகத் தெரிகிறது. இதனால்அவரை நீண்ட நாள் சிறையில் வைத்திருக்க அரசு முயன்று வருகிறது.
ஆனால், விசாரணையை வேகமாக நடத்தியதால் மகேந்திரன் பழிவாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications