திமுகவின் மேம்பால ஊழல்: விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல்
சென்னை:
சென்னை பெரம்பூர் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்ட உத்தரவிடப்பட்ட மேம்பாலப் பணிகளில்நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷன் தனது அறிக்கையை அரசிடம்அளித்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதில் பெரம்பூர்பாலம் முடிவடைவதற்குள் திமுக ஆட்சியை இழந்துவிட்டது.
ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்த திமுக இந்தப் பாலக் கட்டுமானப் பணியில் பெருமளவில் ஊழல் செய்ததாகஅதிமுக குற்றம் சாட்டி மேம்பாலப் பணிகளை நிறுத்தியது.
இந்த பால ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.இதில் மேலும் 2 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த கமிஷன் பெரம்பூர் பால பணிகள் குறித்துஆராய்ந்தது.
பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள், மேம்பாலக் கட்டுமானப் பணிகள், டெண்டர்கள், செலவான தொகை,செலவிடப்பட்ட முறை ஆகியவை குறித்த விவரங்களை இந்தக் கமிஷன் ஆராய்ந்து வந்தது.
தற்போது விசாரணைக் கமிஷனின் ஆய்வுகள் முடிந்து அறிக்கை தயாராகி விட்டது. இந்த அறிக்கையை கமிஷன்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து சமர்பித்தனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு தூசித் தட்டப்படலாம். அப்போது திமுகவினர் மீது அரசு நடவடிக்கையில்இறங்கும் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications