கன மழையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பம் சேதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பெய்த கன மழையினால், மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள ஒரு சிலைசேதமடைந்துள்ளது.

மதுரையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த கடும் மழையினால் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள ஒரு சிலைசேதமடைந்துள்ளது. முக்குருணி விநாயகர் கோவிலுக்கு மேலே அமைந்துள்ள கோபுரத்தில்தான் சேதம்ஏற்பட்டுள்ளது.

இந்தக் கோபுரத்தில் உள்ள பூத கணம் சிலையின் கண் ஒன்று கீழே விழுந்து விட்டது. கன மழை காரணமாக கண்சேதமடைந்து, உதிர்ந்து விட்டதாக கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். உடனே இது ஆகமவிதிகளின்படி சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கோபுரம் 69 அடி உயரம் கொண்டது. 1559ம் ஆண்டு கட்டப்பட்டது. மொத்தம் இதில் 112 சிற்பங்கள்செதுக்கப்பட்டுள்ளன. கடந்த 1995ம் ஆண்டு ரூ. 2.5 லட்சம் செலவில் இந்த கோபுரம் புதுப்பிக்கப்பட்டது.

எவ்வளவு பெரிய மழை, புயலையம் தாங்கும் வகையில் இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 7 பெரிய கோபுரங்களும், 7 சிறிய கோபுரங்களும் உள்ளன. நான்குராஜகோபுரங்களும் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+