அண்ணி, மாமியார் படுகொலை .. "சிங்கம்" தலைமறைவு
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனது அண்ணி மற்றும் மாமியாரைக் கொலை செய்தார் வாலிபர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது நடுதலைக்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் என்ற கருப்பையா.இவரது மனைவி மாதேவி. இருவருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர்.
உக்கம்பட்டி என்ற கிராமத்தில் தனது தாயார் மணியம்மாளுடன், தனியாக வசித்து வந்தார் மாதேவி. உசிலம்பட்டிகோர்ட்டில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் ஜீவனாம்சமும் கோரி மாதேவி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சமீபத்தில் அந்த வழக்கில் மாதேவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கருப்பையாவுக்கு கோர்ட்டிஉத்தரவிட்டது. இதையடுத்து கருப்பையா குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
மாதேவியைத் தீர்த்துக் கட்ட கருப்பையாவின் தம்பி சிங்கம் முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நண்பர் ஒருவருடன் உக்கம்பட்டிக்குச் சென்றார். அங்கு தனது அண்ணி மாதேவியைசரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் மாதேவி அந்த இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார்.
அதைத் தடுக்க வந்த மணியம்மாளுக்கும் சரமாரியாக கத்திக் குத்து விழுந்தது. அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உசிலம்பட்டி போலீஸார் கருப்பையா, அவரது தம்பி சிங்கம், தந்தை ராமுத் தேவர், தாயார் கருப்பாயிமற்றும் சிங்கத்தின் நண்பர் உள்ளிட்ட 5ல பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் சிங்கம் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications