துச்சாதன போலீசாரால் பெண் தற்கொலை: 5 காக்கிகள் சஸ்பெண்ட்
திருவாரூர்:
திருவாரூரில் விசாரணைக்காக கூட்டிச் செல்லப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே உள்ள கூடுர் பகுதியைச் சேர்ந்தவர் தையல். கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக இவரது மகன் மீது போலீஸார் வழக்குத்தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க தையலை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ப்போது அவர் சேலையை உருவி போலீஸார் அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த தையல், வீடு திரும்பியதும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதிமக்கள் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால், இதை முதலில் போலீஸ் உயர் அதிகாரிள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், போராட்டம் வலுத்ததையடுத்து வேறு வழியில்லாமல்இதில் தொடர்புடைய காக்கிச் சட்டைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீஸார் செளந்தரராஜன், சம்பந்தம், அசோகன், ஜீப் டிரைவர் வைத்தியநாதன் ஆகியோர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications