பள்ளிக் குழந்தைகளை அடித்து கீழே தள்ளிய கண்டக்டர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மணப்பாறை பகுதியில் இலவச பஸ் பாஸ்களைப் பயன்படுத்தி பயணம் செய்த மாணவர்களை கண்டக்டர்தாக்கினார். அந்த மாணவர்களை அடித்து பஸ்சிலிருந்து இறக்கி விட்டார்.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் தருவதை போக்குவரத்து ஊழியர்கள் எதிர்த்தே வருகின்றனர். தங்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வும், சலுகைகளும் இந்த இலவச பாஸ் காரணமாக இழக்க வேண்டி இருப்பதாக அவர்கள்கருதுகின்றனர்.

இதனால், இலவச பஸ் பாஸை ஏதோ இவர்களது கை காசில் இருந்து தருவது போல இவர்கள் பேசுவது வழக்கம்.ஆனால், தங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் மட்டும் தமிழகம் முழுவதும் இலவசமாக சுற்ற பாஸ்வைத்திருப்பார்கள்.

இது போன்ற மனப்பான்மை கொண்ட ஒரு கண்டக்டர் தான் மாணவர்களை பஸ்சில் வைத்தே அடித்துள்ளார்.

மணப்பாறை அருகே உள்ள கிராமங்களான கரிசம்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தஏராளமான மாணவ, மாணவியர் மணப்பாறைக்கு வந்து படித்துச் செல்கிறார்கள்.

இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்கிறார்கள்.

இதற்கிடையே மணப்பாறை பகுதி கிராமங்களுக்கு வழக்கமாக வரும் அரசு பஸ் சமீப காலமாகநிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அவதியுற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்,மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுகினர்.

அவர்களிடம் பேசிய அதிகாரிகள், திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு வரும் அரசு டவுன் பஸ்சில் பாஸ்களைக்காட்டி பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து நேற்று காலை மாணவ, மாணவியர் ஆலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது திருச்சியிலிருந்து வந்த மணப்பாறை அரசு பஸ் அங்கு நின்றது. அதில் அத்தனை பேரும் ஏறினர்.

அப்போது கண்டக்டர் சுப்பிரமணியன், இலவச பஸ் பாஸ் செல்லாது, அத்தனை பேரும் டிக்கெட் எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் தான் தங்களை இந்த பஸ்சில் பாஸை காட்டி பயணிக்குமாறுகூறியுள்ளதாக மாணவ, மாணவியர் கூறினர்.

இதையடுத்து பெரும் ஆத்திரமடைந்த கண்டக்டர், எனக்கே ரூல்ஸ் சொல்றீங்களா என்று ஆவேசமாக கேட்டபடிமாணவ, மாணவியரை அடித்தார். சில்லறைகள் நிரம்பிய தனது பையாலேயே விளாசித் தள்ளினார்.

அந்த கொடூர கண்டரின் அடியில் இருந்து 6 வயது மாணவி கூட தப்பவில்லை.

கண்டக்டரின் தாக்குதலில் குமார், இலக்கியா, ஷாஜகான், அபுதாகீர், அருண்குமார் உள்ளிட்ட 13 மாணவ,மாணவியர் காயமுற்றனர். பஸ்ஸை நிறுத்திய அந்த கண்டக்டர் புத்தகப் பைகளை எடுத்து வெளியே வீசிவிட்டுஅந்தக் குழந்தைகளை அடித்து கீழே தள்ளிவிட்டான்.

இவர்கள் அனைவரும் 1 முதல் 6ம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் முழுவதும் காயங்களுடன் அந்தக் குழந்தைள் அழுது கொண்டே வீடுகளுக்குத் திரும்பின. இதையடுத்துஅத்தனை மாணவர்களின் பெற்றோரும் கிராம மக்களும் சேர்ந்து மணப்பாறை காவல் நிலையத்திற்க வந்தனர்.

தகவல் அறிந்த பள்ளி நிர்வாகத்தினரும் காவல் நிலையம் விரைந்தனர். தங்களை கண்டக்டர் கொடூரமாகதாக்கியதை குழந்தைகள் அழுதுகொண்ட போலீசாரிடம் தெரிவித்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை போலீஸ்நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். சுப்பிரமணியன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள்உறுதியளித்தனர்.

சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரிப்பதாக பொது மக்களிடம்உறுதியளித்துள்ளனர்.

இந்த சம்பவம் மணப்பாறை சுற்றுப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை அடித்தபோக்குவரத்து ஊழியர் மீது மக்கள் கடுப்பில் உள்ளனர்.

இதனால், அந்த கிராமங்கள் வழியே செல்லும் பிற பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு அடி விழும் வாய்ப்புஉள்ளதால் அங்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+