திருடுவது தூத்துக்குடியில் விற்பது சென்னையில்.. ஒரு ""ஜகஜால"" நகை மோசடி கும்பல் கைது
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் அங்கிருந்து நகைகளைத் திருடிக் கொண்டு வந்து கொடுக்க, அதை சென்னையில்விற்று பணம் பார்த்து வந்த தாய், மகன் மற்றும் ஒருவர் அடங்கிய 3 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு கூறியதாவது:
பாரிமுனையில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சரோஜா என்ற நடுத்தர வயதுப் பெண் அடிக்கடி வந்து சென்றார்.வரும்போதெல்லாம் நகைகளைக் கொண்டு வந்து விற்றார். இது குறித்து உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து சரோஜாவை ரகசியமாக கண்காணித்தோம். சந்தேகம் உறுதிபடவே அவரது வீட்டில் திடீர் சோதனைநடத்தப்பட்டது.
அங்கு, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகள், ரூ. 30,000 பணம் ஆகியவை இருந்தன. இவ்வளவுநகைகள் வாங்கும் அளவுக்கு அவரிடம் வசதி ஏதும் இல்லை.
இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது அத்தனையும் திருட்டு நகைகள் என்று தெரிந்தது. இதையடுத்துசரோஜாவும் இதில் அவருக்கு உதவியாக இருந்து வந்த அவரது மகன் செல்வராஜும் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடம் நடத்திய விசாரணையின்போது தூத்துக்குடியில் இருந்து இந்த நகைகள் வந்தது தெரிந்தது.தூத்துக்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அங்கிருந்து நகைகளை திருடி இவர்களிடம் கொடுத்து வந்துள்ளார்.
அதை இவர்கள் விற்று பணம் பெற்று முருகேசனுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தைகமிஷனாக இவர்களே வைத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடித் தொழில் நடந்து வந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம். நகைக் கடையில் முருகேசன் வேலை பார்த்து வருகிறார். தனது கடையில்இருந்தும் வெளியில் இருந்தும் போலியான ஆர்டர்களின் பேரில் நகையை வரவழைத்து அவற்றைத் திருடிசென்னைக்கு வந்து சரோஜாவிடம் கொடுத்து விற்று வந்துள்ளார்.
இப்படி நகைகளை விற்று கிடைத்த பணத்தில் தூத்துக்குடி பைபாஸ் சாலையில் ஒரு மிகப் பெரிய ஹோட்டலைக்கட்டியுள்ளார் முருகேசன். திருநெல்வேலியில் இடமும் வாங்கிப் போட்டுள்ளார்.
யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி மிக லாவகமாக இந்த மோசடியை செய்து வந்துள்ளார் முருகேசன்.
திருட்டு நகைகள் விற்பது, வாங்குவதைக் கண்காணிக்க கமிஷனர் விஜயக்குமார் உத்தரவுப்படி சென்னை நகரில் 3ரகசிய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழு தான் இதைக் கண்டுபிடித்தது என்றார்சைலேந்திர பாபு.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications