கூவத்தை ஆழப்படுத்தும் பணி: ஓ.பி. தொடங்கி வைத்தார்
சென்னை:
சென்னையில் மழை பெய்யும் காலங்களில் நகரில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கூவம் ஆற்றைதூய்மைப்படுத்தி, ஆழப்படுத்தி மழை நீர் செல்ல வகை செய்யும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் பெய்த கன மழையால் நகரமே ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழை நீர் கடல் போல தேங்கியது.அண்ணா சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாத காரணத்தால்தான் இந்தளவுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதைஉணர்ந்த மாநகராட்சி நிர்வாகம், கூவம் ஆற்றை ஆழப்படுத்தி, தூய்மையாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை இத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கூவம் ஆற்றை ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அவரும், ஊராட்சித் துறை அமைச்சர்எம்.சி.சம்பத், துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications