சென்னைக்கு வந்த பறக்கும் கண் மருத்துவமனை!
சென்னை:
சகலவிதமான கண் மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் கூடிய பறக்கும் கண் மருத்துவமனையான ஆர்பிஸ் சர்வதேசகண் மருத்துவமனை விமானம் (Orbis) சென்னை வந்துள்ளது. 3 வாரங்களுக்கு இது சென்னையில் பொதுமக்களுக்கு சிகிச்சை தரும்.
1982ம் ஆண்டு இந்த பறக்கும் கண் மருத்துவமனை அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. வளரும் நாடுகளில் கண்நோய்களுக்கு சிகிச்சை தரும் உயரிய நோக்கத்தில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உலகின் பல்வேறு வளரும் நாடுகளுக்கும் இந்த விமான மருத்துவமனை சென்று சிகிச்சை அளித்துவருகிறது. இந்த பறக்கும் மருத்துவமனையில் 25 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்த பறக்கும் கண் மருத்துவமனை விமானம் சென்னை வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இது 3வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
சிகிச்சை அறை, ஆபரேஷன் அறை, டாக்டர்கள், நர்சுகள் அறை, டாக்டர்கள் அறை, பாடம் நடத்தும் வசதி,வீடியோ கான்பரன்சிங் அறை, லேசர் அறை, மாநாட்டுக் கூடம் ஆகியவை இதில் உள்ளன.
உலகின் பிற பகுதிகளுக்கும் போன், பேக்ஸ், இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
இந்த விமானத்தின் மருத்துவ சேவையை தமிழக ஆளுனர் ராம் மோகன் ராவ் இன்று தொடங்கி வைக்கிறார்.உள்ளூர் டாக்டர்களுடன் சேர்ந்து இந்த மருத்துவமனை டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.
ஆண்டுதோறும் இந்த மருத்துவமனைக்காக ரூ. 120 கோடி செலவழிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் மானிய உதவி, அன்பளிப்புகள், நன்கொடைகள் மூலம் இந்த நிதிவசூலிக்கப்படுகிறது. இதுவரை 80 நாடுகளில் இந்த மருத்துவமனை சென்று சிகிச்சை அளித்துள்ளது.
நேரடியாக 23,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தனது பல்வேறு திட்டங்கள் மூலம் 90 லட்சம் பேருக்குகண் பார்வையை சீர் செய்துள்ளது இந்த பறக்கும் மருத்துவமனை.
உலக சுகாதார மையம், சர்வதே கண்பார்வை இழப்பு தடுப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்துஆர்பிஸ் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்ஸ் தான் இந்தத் திட்டத்துக்காக தனது டி.சி.-8 ரக விமானத்தை இலவசமாகஇந்த அமைப்புக்குத் தந்து உதவியது. பின்னர் அந்த விமானம் மாற்றப்பட்டது. இப்போது டி.சி- 10 ரகவிமானத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications