இலக்கிய சோலையில் வீசிய பாசத் தென்றல்: கருணாநிதி சந்திப்பு குறித்து வைகோ
மயிலாடுதுறை:
வேலூர் சிறையில் திமுக தலைவர் கருணாநிதி தன்னை சந்தித்தது இலக்கியச் சோலையில் வீசிய பாசத் தென்றல்போல இருந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
1984ம் ஆண்டு அதிமுகவினர் மீது நடந்த தாக்குதல் வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை கோர்ட்டில் வைகோ ஆஜர்செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு வெளியில் வந்த வைகோவிடம், வேலூர் சிறையில் கருணாநிதி வந்து சந்தித்தது குறித்துகேட்டபோது,
அரசியல் குறித்து அப்போது எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு எனக்கு மன நெகிழ்ச்சியைக் கொடுத்தது.
தொல்காப்பியம் குறித்துப் பேசினோம், கலிங்கத்துப் பரணி குறித்துப் பேசினோம், இன்னும் பல காப்பியங்கள்குறித்துப் பேசினோம். இதுதவிர அங்கு அரசியலுக்கு இடம் தரவில்லை.
டெல்லியில் மதிமுக, திமுக இணைந்து செயல்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அரசியல் பின்னணியில்அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம். அந்த ஆட்சியை எதிர்த்து திமுக போராடுகிறது, மதிமுகவும்போராடுகிறது. பொது நலனில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் இந்த ஆட்சியை எதிர்த்துப் போராடவேண்டும் என்றார் வைகோ.
இந்த வழக்கை நாகப்பட்டனம் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வைகோ தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. அதை கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜ்குமார், வருகிற 20ம் தேதிக்கு வழக்கைஒத்திவைத்தார்.
அப்போது விசாரணை எங்கு நடைபெறும் என்பது இறுதி செய்யப்படும்.
இதற்கிடையே சிறையில் இருக்கும் வைகோவை பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் சந்திப்பார் ன்று தெரிகிறது. சிறைக்குச் சென்றவைகோவை பா.ஜ.க. இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், கருணாநிதி சந்தித்துவிட்டு வந்தததையடுத்து அவரைச் சந்திக்க பா.ஜ.க.தலைவரும் முடிவு செய்துள்ளார்.
மீனவர்கள் விவகாரம்: வைகோ கடிதம்
இந் நிலையில் நாகப்பட்டனம் மற்றும் ஜெகதாப்பட்டனம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக் கடற்படை வீரர்களால்சிறை பிடிக்கப்பட்ட 44 மீனவர்களையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர் சிறையிலிருந்து அவர் சின்ஹாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்பெல்லாம் தமிழக மீனவர்களை நடுக் கடலில் வைத்து சுட்டுக் கொல்வதை இலங்கை கடற்படைவழக்கமாக்கியிருந்தது.
ஆனால் சமீப காலமாக மீனவர்களை நடுக்கடலில் சிறை பிடித்து அவர்களது படகுகளில் உள்ள மீன்கள், வலைகள்,பணம், எரிபொருளை பறிமுதல் செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்த பின்பு விடுவித்து வருவதை புதுப்பழக்கமாக கொண்டுள்ளது இலங்கை கடற்படையினர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications