ஜெ- பெர்னாண்டஸ் சந்திப்பு: வீரப்பன் குறித்து ஆலோசனை
சென்னை:
சென்னை வந்த பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சுமார் 40 நிமிடங்கள் இச் சந்திப்பு நீடித்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பெர்னாண்டஸ் கூறினார்.
ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுக்கும் முயற்சியாக இச் சந்திப்பு நடந்ததா என்றுகேட்டபோது, அப்படி எல்லாம் இல்லை என பதிலளித்தார்.
பின்னர் அங்கிருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியஅமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை குறித்து விசாரித்தார். அப்போது அங்கிருந்த திமுக தலைவர் கருணாநிதியையும் பெர்னாண்டஸ்சந்தித்துப் பேசினார்.
வீரப்பன் குறித்து பேச்சு:
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுடன் வீரப்பன் விவகாரம் குறித்து பெர்னாண்டஸ் பேசியதாகத் தெரிகிறது. வீரப்பனிடம் இருந்துநாகப்பாவை மீட்க பெர்னாண்டசின் உதவியை கர்நாடகம் கோரியுள்ளது. இது தொடர்பாக அவர் ஜெயலலிதாவிடம் பேசியதாகத்தெரிகிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை தொடர்ந்துகொணடிருப்பதாகக் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
கர்நாடகத்துடன் இணைந்து வீரப்பன் தேடுதல் வேட்டை நடத்துவதை தமுழக அதிரடிப்படை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பேநிறுத்திவிட்டது. இப்போது நமது படையின் தேடுதல் வேட்டை தமிழக காட்டுப் பகுதியில் மட்டுமே தொடர்ந்து நடந்து வருகிறது.
வீரப்பனிடம் கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப முயற்சி செய்வதாக நாகப்பாவின் மனைவியிடம் நான் எந்த உறுதிமொழயையும்தரவில்லை.
நாகப்பாவை மீட்க தமிழக அரசிடம் கர்நாடகம் இதுவரை எந்த உதவியும் கோரவில்லை. உதவி கேட்டால் அதை தமிழகம் வழங்கும் என்றுஅறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மணியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம்வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
மணி மீது கர்நாடகத்தில் 5 வழக்குகள் உள்ளன. இதனால் அவர் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தடா வழக்கில் மைசூர் நீதிமன்றத்திடம் ஜாமீன் கிடைத்துள்ளது. இரு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் மேலும் 2 வழக்குகள் பிறநீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கொளத்தூர் மணி அல்லது அமைச்சர் ராஜூ கெளடாவை அனுப்பினால் தான் நாகப்பாவை விடுவிப்பது குறித்து பேசுவேன் என்றுவீரப்பன் கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரை அனுப்ப முடியாது என கர்நாடகம் ஏற்கனவே கூறிவிட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications