திருடனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து ரூ.3.5 லட்சம் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடியநபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரத்தில் வசிக்கும் மிட்டாலால் ஒரு நகைக் கடை உரிமையாளர். இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவில்ஒரு நபர் புகுந்தார்.
வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறினார்.இருளில் மறைந்து அவர் தப்ப முயன்ற போது சிலர் அவரைப் பார்த்து விட்டனர்.
உடனடியாக "திருடன், திருடன்" என்று கத்திக் கொண்டே அத்தனை பேரும் திருடனைத் துரத்தினர். சிறிது நேரத்துரத்தலுக்குப் பிறகு அந்த நபர் பிடிபட்டார்.
இதையடுத்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. பின்னர் அந்த நபர் போலீஸாரிடம்ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் அந்த நபரின் பெயர் சையத் இப்ராகிம் என்றும் அவர் ஆற்காட்டைச் சேர்ந்தவர் என்றும்தெரிய வந்தது.
-->












Click it and Unblock the Notifications