மதமாற்றத்தை ஆதரித்து காஞ்சிபுரத்தில் எதிர்க் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டம்
சென்னை:
காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்தாரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறுவதைஆதரித்து அனைத்து எதிர்க் கட்சிகளும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி, பின்னர் சட்டசபையில்நிறைவேற்றியும் விட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கூத்தாரம்பாக்கத்தில் உள்ள கோவிலில் நுழைய தங்களுக்கு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்துஅந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 தலித் குடும்பங்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறப் போவதாக சமீபத்தில் எச்சரித்தனர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தலித் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.இருப்பினும் கூத்தாரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாதி இந்துக்கள் பிடிவாதமாக இருந்ததால் பிரச்சினைக்கு இன்னும்தீர்வு ஏற்படவில்லை.
மதமாற்றத்தில் ஈடுபடுவதற்காக சமீபத்தில் சில தலித் குடும்பத்தினர் ஒரு மசூதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவர்களை சில அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், யாருக்கும் தெரியாமல் தாங்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறப்போவதாகவும் அந்த தலித் மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள்மதம் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தலித்கள் மதம் மாறுவதை ஆதரித்து அனைத்து எதிர்க் கட்சிகளின் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில்விரைவில் நடைபெறவுள்ளது.
திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இதற்குஏற்பாடு செய்துள்ளன.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications