கன மழையால் டிராபிக் ஜாம்: தள்ளாடுகிறது சென்னை
சென்னை:
சென்னை நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளிநேரத்தில் பெய்த மழையால் விடிய விடிய வாகனங்கள் அண்ணா சாலையில் நின்றிருந்தன.
அதே போல நேற்றும் நகர் முழுவதும் பயங்கர போக்குவரத்து நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர மக்கள்கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கன மழைக்கு சாலைகள் அனைத்தும் பெயர்ந்து போய் விட்டதால், வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக மழை இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்துசேதமடைந்திருந்த சாலைகள் மீண்டும் மோசமாகியுள்ளன.
அண்ணாசாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக சாலைகள் காணப்படுகின்றன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள்பாதிப்படைந்துள்ளன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விட்டதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.இதையடுத்து போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்து பழுதடைந்த வாகனங்களை ஓரம்கட்டி போக்குவரத்தைசரி செய்தனர்.
இதேபோல, பெரம்பூர், புரசைவாக்கம், சூளை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சேதமடைந்த சாலைகளை உனடியாக சரிசெய்தால் நல்லது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
விடிய விடிய கன மழை:
இதற்கிடையே சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது.
இதனால் சென்னை நகரில் ஏற்கனவே நீரில் தத்தளிக்கும் வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம்,நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மேலும் தண்ணீர் சேர்ந்து விட்டதால் மக்கள் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மழை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் பெரும் பீதியில் மூழ்கியுள்ளனர்.
திமுக மீது பன்னீர் பாய்ச்சல்:
இதற்கிடையே, வேளச்சேரி பகுதியில் ரூ.7 கோடி செலவில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்றுபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆக்கிரமித்து குடிசைகள்போட்டு குடியிருந்து வருகின்றனர்.
இதனால் கால்வாய்ப் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர், சாக்கடை நீர் போக வழியில்லாமல் போய் விட்டது.தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
விரைவில் இந்தப் பகுதியில் ரூ. 7 கோடி செலவில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும் தமிழகம் முழுவதிலும் மழையினால் பாதிக்கப்படாத, சேதமடையாத சாலைகள் அமைக்கப்படும்.அதிநவீன வசதியுடன் கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்பன்னீர்செல்வம்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவரான சோ. பாலகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம்பேசுகையில், வரும் 18ம் தேதிக்குள் சென்னையின் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை சென்னைமாநகராட்சி வெளியேற்றாவிட்டால் அதைக் கண்டித்து பேரணிப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கைவிடுத்தார்.
நிரம்பும் அணைகள்:
இதற்கிடையே மதுரையிலும் நேற்றிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் மழையால் மதுரை ரோடுகள் காணாமல்போய்விட்டன. வெறும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மக்கள் நொந்து போய் பயணித்து வருகின்றனர்.
பெரியார் அணையில் நீர் மட்டம் 121.1 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 2,234 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் 55.90அடிக்கு நீர் நிரம்பிவிட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள மணலாறு என்ற அணை நிரம்பிவழிகிறது. முக்கிய ஏரிகளும் குளங்களும் கூட நிறைந்து விட்டன.
-->
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications