நெல்லை மேயர் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் வழக்கு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மேயராக அதிமுகவின் ஜெயராணியைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரிதிமுகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயராணி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தலித் என்ற போதிலும், அவர் தன்னுடைய வேட்பு மனுவில் இந்து தலித்என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அம்மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, மேலும் ஐந்து அதிமுகவினர் கடைசி நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனாலும்ஜெயராணியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்டு, 10,627 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவேட்பாளரும் முன்னாள மேயருமான மு. உமாமகேஸ்வரியைத் தோற்கடித்து, திருநெல்வேலி மேயரானார்.
இந்நிலையில், திருநெல்வேலி மேயராக ஜெயராணி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திமுக வழக்கறிஞரான வே.பொன்னம்பலநாதன் என்ற துரை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவின் விவரம்:
பிறப்பால் கிறிஸ்தவராகவும் பின்னர் இந்துவாகவும் மாறிய ஒருவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என்று கடந்த 1996 ஜனவரி 25ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே. ராமசாமியும் ஜி.எஸ். பட்நாயக்கும்தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, கடந்த 2001 பிப்ரவரி 20ம் தேதி அனைத்து வட்டாட்சியர்களுக்கும்கோட்டாட்சியர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார்.
ஆனால், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராணியின் பெற்றோர் இன்றைக்கும் கோவில்பட்டி-சேகரத்தில்உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சங்கப் பணம் செலுத்தி வருகின்றனர். ஜெயராணியின் மாமனார்-மாமியார் கூடபாளையங்கோட்டை தேவாலயத்தில் சங்கப் பணம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், தலித் இந்துக்களுக்கான சலுகையைப் பெறுவதற்கு ஜெயராணிக்கு எந்தவித உரிமையும் கிடையாது.அவர் திருநெல்வேலி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றுபொன்னம்பலநாதன் தன் மனுவில் கூறியுள்ளார்.
நீதிபதி பானுமதி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதேபோல், திமுக சட்டத் துறைச் செயலாளர் அ.லெ. சுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் ஆகியோரும்ஜெயராணியின் தேர்வை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications