தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்கள்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்களை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக ரயில்வே இணைஅமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிசங்கராச்சாரியார்களான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஜெயேந்திரர் ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில்,
தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்களை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தென்னகத்தின் புனித இடங்களான திருப்பதி, குருவாயூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும்வகையில் புதிய ரயில் விடப்படும்.
அதேபோல, சுற்றுலா ஸ்தலங்களை இணைக்கும் வகையிலும் புதிய ரயில் விடப்படும் என்றார்.
மற்றொரு ரயில்வே இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி பேசுகையில், காஞ்சிபுரத்திற்கும், சென்னை கடற்கரைக்கும்இடையே மேலும் ஒரு மின்சார ரயில் விடப்படும். அடுத்த மாதம் முதல் இந்த ரயில் ஓடும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமானஎஸ்.எஸ். திருநாவுக்கரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications