சென்னையை ஸ்தம்பிக்க வைத்த அடை மழை
சென்னை:
சென்னையில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னைநகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தகாற்றழுத்த மண்டலம் காரணமாக புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால்இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை சென்னை புறநகர் முழுவதும் நல்ல மழை பெய்தது. ஆனால் இரவில் சென்னைநகருக்குள் கன மழை பெய்யத் தொடங்கியது. அது வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிற்காமல் நீடித்துவருகிறது.
இந்தக் கன மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன. அண்ணா சாலையின் பலபகுதிகளில்வெள்ள நீர் தேங்கியுள்ளது.
பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை இரவு முழுவதும்அப்பகுதிகளில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் கட்டிட சுவர்கள் போன்றவை இடிந்து விழுந்தன.
இந்த மழையால் பல பாதிப்புகள் இருந்தாலும், சென்னை குடிநீர்ப் பிரச்சினைக்கு இந்த மழை நீர் உதவும் என்றநம்பிக்கையும் சென்னை மக்களிடம் உண்டு.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications