ஆந்திராவை நோக்கி புயல் சின்னம்: தப்பியது சென்னை
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை காலை சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையேகரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இயற்கையின் சீற்றத்தைச் சமாளிக்க அனைத்துமாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
புயல் சின்னம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில்தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் மட்டும் சுமார் 43 பகுதிகளில் மழை வெள்ளத்தில் 10,000க்கும் மேற்பட்ட குடிசைகள்மிதந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னைக்குக் கிழக்கே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் படிப்படியாகவடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் புயல் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை காலையிலோ சென்னைக்கும் ஆந்திராவின்மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று மாலையிலேயே அது கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திசை மாறிவிட்டது.
இதனால் புயலிலிருந்து தமிழகம் (குறிப்பாக சென்னை மாநகரம்) தப்பி விட்டது. புயல் ஏற்படும் போதெல்லாம்மாட்டிக் கொள்ளும் ஆந்திரப் பிரதேசம் இந்த முறையும் மாட்டிக் கொண்டுள்ளது.
இருந்த போதிலும் இயற்கையின் சீற்றத்தைச் சமாளிப்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அவற்றை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச்செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புயல் தாக்கினால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார்,தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஊரகக் காவல் படையினரும் உதவி செய்து, மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications