ஆண்டிப்பட்டி அருகே 7 ஏக்கர் கஞ்சா தோட்டம் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
வருஷநாடு:
வருஷநாடு மலைப் பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போதைப் பொருள்தடுப்புத் துறையினர் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு மலைப் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புத் துறைக்குத் தகவல் வந்தது.
உடனடியாக அப்பகுதி முழுவதையும் போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகச்சோதனையிட்டனர்.
அப்போது யானை கெஜம் என்ற இடத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள்பயிரிடப்பட்டிருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
பின்னர் அந்தத் தோட்டத்தை சுற்றி வளைத்த போதைப் பொருள் அதிகாரிகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சாசெடிகளைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர்.
இந்தக் கஞ்சா செடிகளின் மொத்த மதிப்பு ரூ.1.4 கோடி ஆகும்.
-->












Click it and Unblock the Notifications