பிரதமருடன் நாகப்பா குடும்பத்தினர் சந்திப்பு
டெல்லி:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் குடும்பத்தினர் இன்றுடெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து நாகப்பாவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவற்புறுத்தினர்.
நாகப்பா காட்டுக்குள் கடத்தப்பட்டு 78 நாட்கள் ஆகியும் கூட அவரை மீட்பதற்கான நடவடிக்கையில்எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்தும் நாகப்பாவின் குடும்பத்தினர்முறையிட்டுப் பார்த்து விட்டனர். ஆனாலும் வீரப்பனிடம் தூதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளும் இன்னும்தொடங்கவில்லை.
இந்நிலையில் வாஜ்பாயை இன்று காலை நாகப்பாவின் மனைவி பரிமளா, மகன் ப்ரீதம் மற்றும் மருமகன் கிரன்பாட்டீல் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு நாகப்பாவை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது கேட்டுக் கொண்டனர்.
தமிழக, கர்நாடக முதல்வர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரிப்பதாக வாஜ்பாயும் அவர்களிடம் உறுதிஅளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய நாகப்பாவின் குடும்பத்தினர், இவ்விவகாரத்தில் தமிழக-கர்நாடக அரசுகள்இணைந்து செயல்படத் தவறி விட்டன என்று குற்றம் சாட்டினர்.
கர்நாடகாவில் எதிர்க் கட்சிகள் தர்ணா:
இதற்கிடையே நாகப்பாவை விரைவில் மீட்க கர்நாடக அரசை வலியுறுத்தி அம்மானில எதிர்க் கட்சிகளானபாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இன்று பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதாவுடன் கிருஷ்ணா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி நாகப்பாவை வீரப்பனிடமிருந்துவிடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications