சேலம் சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: 16 பேர் மண்டை உடைந்தது
சேலம்:
சேலம் மத்திய சிறையில் கைதிகள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 16 கைதிகளின் மண்டை உடைந்துரத்தம் கொட்டியது.
சமீபத்தில் அன்புச் செல்வன் என்ற கைதியைப் பார்க்க வந்த அவரது வக்கீல் மற்றும் பெண் உறவினர் ஆகியோரைப்பற்றி ராஜு என்பவர் காமெண்ட் அடித்தார்.
இதுகுறித்து ராஜுவின் சகாவான மணிகண்டனிடம் அன்புச் செல்வன் புகார் கூறினார். ஆனால் இதை மணிகண்டன்கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இது மோதலாக மாறவே மணிகண்டன்கோஷ்டியினரை அன்புச் செல்வனின் ஆதரவு கைதிகள் செங்கற்களால் பயங்கரமாகத் தாக்கினர். இதில்மணிகண்டனுடன் ராஜ்குமார் என்ற கைதியும் காயமடைந்தார்.
இதையடுத்து மோதல் தீவிரமானது. உருட்டுக் கட்டை, சவுக்குக் கட்டை, செங்கல் போன்றவற்றால் கைதிகள்ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
தாங்கள் சாப்பிடும் அலுமினியத் தட்டுகளை இரண்டாக உடைத்து அவற்றைக் கொண்டும் கைதிகள் தாக்கினர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த சிறைக் காவலர்கள் கைதிகள் மோதலைத் தடுக்க முனைந்தனர். ஆனால்அவர்களையும் மீறி பயங்கர சத்தத்துடன் கைதிகள் மோதிக் கொண்டதால் சேலம் சிறை போர்க்களம் போல்மாறியது.
இந்தத் தாக்குதல்களில் அன்புச் செல்வன் உள்ளிட்ட மேலும் 14 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சிறைக் காவலர்கள் அதிரடியாகச் செயல்பட்டு, லேசான தடியடி நடத்தி கைதிகளை அவரவர்அறைக்குள் தள்ளிப் பூட்டினர்.
காயமடைந்த 16 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறையிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடனே கைதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது போல் நடித்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறைக்குள் ஆயுதமேந்திய போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications