டி.வியில் படம் பார்த்து வெடிகுண்டு புரளி கிளப்பிய சிறுவன், சிறுமி கைது
சேலம்:
டிவியில் வந்த படத்தைப் பார்த்து விட்டு அதே போல நிஜ வாழ்க்கையிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருமாணவனையும் மாணவியையும் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
சேலம் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் படித்து வருபவர்கள் சுஜீதா (12), அவரது சகோதரர் முகமது அம்சா(9).
சமீபத்தில் இஸ்லாமியா பள்ளிக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப்பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றுடன் பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் தீவிர சோதனைநடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது,எங்கிருந்து போன் செய்யப்பட்டது என்பதும் அந்தத் தொலைபேசி எண்ணும் தொலைபேசி நிலையம் மூலம்தெரிய வந்தன.
அந்த எண் கொண்ட வீட்டை முற்றுகையிட்டு, விசாரணை நடத்திய போது தான் சுஜீதாவும், அம்சாவும் "நாங்கள்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தோம்" என்று ஒப்புக் கொண்டனர்.
இவர்களா மிரட்டியது என்று அதிர்ந்து போன போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, டிவியில் வந்த ஒருபடத்தைப் பார்த்து தான் இவர்கள் டெலிபோனில் மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.
நடிகர் கமலஹாசன் நடித்திருந்த அந்தப் படத்தில் ஒருவன் போனில் மிரட்டல் விடுப்பது போல நாமும் செய்துபார்க்கலாம் என்று சுஜீதாவும், அம்சாவும் நினைத்து, தாங்கள் படிக்கும் பள்ளிக்கே போன் செய்து மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் சிறு வயதினராக இருப்பதால்நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
செய்த தவறு என்ன என்பது கூட புரியாத நிலையில், தங்களது தந்தையுடன் சைக்கிளில் ஏறி ஜாலியாக சென்றஅவர்களைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications