மேட்டூர் அணையில் நீர் திறக்க உதவாத விவசாயிகள் சங்க தலைவருக்கு சவுக்கடி தர முடிவு
நாமக்கல்:
மேட்டூர் அணையில் நீர் திறக்க உதவாத கொங்கு நாடுகள் விவசாயிகள் சங்கத் தலைவருக்கு திட்டமிட்டபடிசவுக்கடி கொடுக்கப்படும் என்று அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரையின் வழியாக தண்ணீர் திறந்து விடப்படாததற்கு சங்கத் தலைவர்தெய்வசிகாமணி மற்றும் ராமசாமி கவுண்டர் ஆகியோர் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கசங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொங்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அனைவரும் சாராயவியாபாரிகள் என்று அமைச்சர் பொன்னையன் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகவே பரபரப்பு அதிகரித்தது.
பொன்னையனைக் கண்டித்து ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் விவசாயிகள் சங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பொன்னையனுக்காக கொங்கு விவசாயிகள் சங்கம் தீவிரமாக பிரசாரம்செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெய்வசிகாமணி மற்றும் ராமசாமிக் கவுண்டருக்கு சவுக்கடி கொடுக்கும் நிகழ்ச்சியைகுமாரபாளையம் கொங்கு சமுதாய மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்படவே, திட்டமிட்டபடி 17ம் தேதி பொது இடத்திலேயே சவுக்கடி தண்டனையைநிறைவேற்றப் போவதாக கொங்கு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
ஆனால் சவுக்கடி என்பது சட்ட விரோதமானது. அப்படி நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications