அமைதிக்காக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்: கலாம்
டெல்லி:
இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டால் அணு ஆயுதங்களைப்பயன்படுத்துவதற்குத் தயங்க மாட்டோம் என்று ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
நாடெங்கிலும் இருந்து வந்திருந்த சுமார் 100 மாணவ-மாணவிகளுடன் இன்று குழந்தைகள் தின விழாவை டாக்டர்கலாம் டெல்லியில் உற்சாகத்துடன் கொண்டாடினார்.
அப்போது வழக்கம் போல மாணவ-மாணவிகளைக் கேள்விகள் கேட்கச் செய்தார் டாக்டர் கலாம்.
அதன்படி "அணு ஆயுதங்களை அமைதி வழியில் எப்படிப் பயன்படுத்த முடியும்?" என்று ஒரு மாணவன் கேட்டகேள்விக்கு டாக்டர் கலாம் பதிலளிக்கையில்,
இந்தியா எப்போதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என்பதை ஏற்கனவே பல முறை கூறிவந்துள்ளோம்.
ஆனால் நம் நாட்டின் அமைதிக்கோ, பாதுகாப்புக்கோ ஆபத்து என்று வந்து விட்டால் அணு ஆயுதங்களை நிச்சயம்பயன்படுத்துவோம்.
பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. ஆனாலும் நம்முடைய இரு அண்டை நாடுகள் அணுஆயுதங்களை வைத்திருப்பதால் தான், பாதுகாப்புக்காக நாமும் அவற்றைத் தயாரித்து வைத்திருக்க வேண்டியநிலையில் உள்ளோம் என்றார் டாக்டர் கலாம்.
எப்போதும் போலவே மாணவ-மாணவிகளுடன் படு உற்சாகத்துடன் டாக்டர் கலாம் பேசிக் கொண்டிருந்தார்.அவர்களையும் பேச வைத்தார். கேள்விகளைக் கேட்கவும் வைத்தார்.
ஜனாதிபதியான பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததைக் குறிப்பிட்ட டாக்டர் கலாம், நாட்டிலுள்ளமாணவ-மாணவிகளும் தெளிவாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் போதும், இந்தியா விரைவில் வல்லரசாகி விடும்என்றார். இன்றுடன் ஒரு லட்சம் மாணவ-மாணவிகளைச் சந்தித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்தியாவில் படித்த பலரும் படித்து முடித்தவுடன் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுகிறார்களே.இதனால் இந்தியாவிற்குத் தானே நஷ்டம்?" என்று ஒரு மாணவன் கேட்ட கேள்வியை "வெகு அற்புதம்" என்றுபாராட்டினார் டாக்டர் கலாம்.
மேலும் அவனுக்குப் பதிலளிக்கையில், "இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான என்ஜினியர்களும்,விஞ்ஞானிகளும் உருவாகிக் கொண்டே உள்ளனர்.
இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் சில ஆயிரம் பேரால் இந்தியாவிற்குப் பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது.
மேலும் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் தவறேதும் கிடையாது. அந்த உரிமை அவர்களுக்கு உண்டுஎன்று பதிலளித்தார் டாக்டர் கலாம்.
அறிவியல், ஆன்மீகம் முதல் அரசியல், நதிகள் இணைப்பு வரை மாணவ-மாணவிகள் கேட்டகேள்விகளுக்கெல்லாம் சற்றும் சளைக்காமல் பதிலளித்து அவர்களையும் பார்வையாளர்களையும் டாக்டர் கலாம்திணறடித்தார்.
டாக்டர் கலாம் பேசும் போது அவருடைய பேச்சைக் குறிப்பெடுத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் முயற்சித்தபோது, "அதெல்லாம் வேண்டாம். என்னுடைய பேச்சுக்கள் அனைத்தும் www.presidentofindia.nic.in என்றவெப்சைட்டில் எப்போதும் இருக்கும். தேடி எடுத்துப் படித்துக் கொள்ளுங்கள்" என்றார் அவர்.
-->
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications