தொடர்கிறது கரூர் எம்.பி தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை
சென்னை:
கரூர் எம்.பி. தொகுதி வாக்குகள் எண்ணும் பணி 2வது நாளாக இன்றும் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
கரூர் எம்.பி. தேர்தலில் அதிமுக வேட்பாளர் சின்னச்சாமி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால்,அங்கு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளர் பழனிச்சாமி சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.
அந்த வழக்கில், மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கரூர் தொகுதியில்பதிவான வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
அங்கு பதிவாளர் வெங்கடேசன் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2வது நாளாகஇன்றும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்குகள் எண்ணப்படும் அறைக்குள்,வேட்பாளர்கள், அவர்களது வக்கீல்கள் தவிர வேறு யாரும்அனுமதிக்கப்படவில்லை. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் அறைக்கு வெளியே பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
