For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம் கேட்டுக் கொண்டால் நாகப்பாவை மீட்க தமிழகம் உதவும்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடக அரசு முறைப்படி கேட்டுக் கொண்டால் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் அமைச்சர்நாகப்பாவை விடுவிப்பதற்குத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

வீரப்பனைப் பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு தான் உள்ளது.

ஆனால் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து தமிழக அரசுக்குகர்நாடக அரசு எந்த விதமான தகவலையும் இதுவரை அளிக்கவே இல்லை.

மேலும் நாகப்பாவை மீட்பதற்காக உதவ வேண்டும் என்றும் கர்நாடக அரசு எங்களிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

நாகப்பாவை மீட்பதற்கான உதவிகளை கர்நாடக அரசு முறைப்படி தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டால் நிச்சயம்நாங்கள் அதற்கு ஒத்துழைப்போம். நாகப்பாவை மீட்பதோடு மட்டுமல்லாமல், வீரப்பனைப் பிடிப்பதற்கும் தமிழகஅரசு உதவும்.

கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே, அம்மாநிலத்தின் காட்டுப் பகுதியில் வீரப்பனைப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக அதிரடிப் படையினர் திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டனர்.

இருந்தாலும் அம்மாநிலத்தின் எல்லை அருகே உள்ள வனப் பகுதிகளில் தமிழக அதிரடிப் படையினர் முழுவீச்சுடன் வீரப்பன் தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டு தான் உள்ளனர்.

இன்னும் கர்நாடக காட்டுப் பகுதிகளில் தான் வீரப்பன் இருக்கிறான். அவன் தமிழக எல்லைக்குள் நுழைந்தால்தமிழக அதிரடிப் படையினரிடம் நிச்சயம் பிடிபடுவான்.

இந்நிலையில் கர்நாடக அரசு எங்களிடம் முறைப்படி வேண்டுகோள் விடுத்தால், அம்மாநிலத்தின் காட்டுப்பகுதிகளில் புகுந்தும் கூட தமிழக அதிரடிப் படையினர் வீரப்பன் தேடுதல் வேட்டையை நடத்தத் தயாராகஉள்ளனர் என்றார் ஜெயலலிதா.

காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட போடு, இவ்விவகாரத்தில் நிரந்தரமான தீர்வு ஏற்படுவதையேதமிழகம் விரும்புகிறது என்றும் நாளை உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணை நடக்கவுள்ளதால் இது குறித்துமேலும் பேச விரும்பவில்லை என்றும் பதிலளித்தார் ஜெயலலிதா.

மதமாற்றத் தடைச் சட்டம் பற்றி கேட்ட போது, தானாக விரும்பி மதம் மாற விரும்புபவர்களை இந்தச் சட்டம்தடுக்காது என்றும் இது குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்து விட்டதாகவும் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு முந்தைய திமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிர்வாகமுறைகேடுகள் தான் காரணம் என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

48 Aݨ۵ݠݦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X