குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சென்னை தொழிலதிபர்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி கடற்கரையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் விஷம்கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஸ்ரீதர். இவரது மனைவி பெயர் லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

ஸ்ரீதரின் நிறுவனத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மனக் கவலையில் இருந்தார் அவர். இந்நிலையில்வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து மனைவி, குழந்தைகளுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார். கடற்கரையில் சிறிது நேரம் குடும்பத்தோடுமகிழ்ச்சியாக இருந்தார் அவர்.

பின்னர் ஐஸ்கிரீம் வாங்கி அதில் விஷத்தைக் கலந்தார். அதன் பிறகு அதைச் சாப்பிட்ட ஸ்ரீதர், தன் மனைவி,குழந்தைகளுக்கும் அவற்றைக் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் பதறிப் போய்அவர்களை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+