மழை நிவாரணம் கோரி சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சரி செய்வது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்குவதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, இளைஞர் அணிச் செயலாளர்ஸ்டாலின் ஆகியோரது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆற்காடு வீராசாமி பேசுகையில், சாலைகளை சீரமைக்க ரூ.104 கோடித் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் இந்தப் பணத்தில் ஒரு பைசா கூட அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுஒதுக்கப்பட்டதில்லை. இந்தத் திட்டம் முன்பே திமுக அறிவித்தது தான் என்றார்.
பின்னர் ஸ்டாலின் தலைமையில் ஒரு குழுவினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி 7வது மண்டலஅலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர்.
ஆனால் மனுவை வாங்க ஒரு அதிகாரியும் அங்கு இல்லை. அனைவரும் துணை மேயர் கராத்தே தியாகராஜன்தலைமையில் நடக்கும் கூட்டத்திற்குச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்களை அழைத்த ஸ்டாலின் அவர்களிடம் மனுவைக் கொடுத்தார். பின்னர் அவர்நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் வருவோம் என்று தெரிந்து கொண்டு வேண்டும் என்றே துணை மேயர் என்ற பெயரில் ஒருவர் நடத்தும்கூட்டத்திற்கு அதிகாரிகள் சென்று விட்டனர்.
நாங்கள் கொடுக்கும் மனுவை அதிகாரிகள் வாங்கக் கூடாது என்பதற்காகவே அந்த நபர் இப்படிச் செய்துள்ளார்.
ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையில் கூட எங்களை வரவேற்க யாரும் இல்லை. இதன் மூலம் இந்த ஆட்சியின்லட்சணத்தை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்றார் ஸ்டாலின்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications