25ம் தேதி பாலசிங்கம்-ரணில் சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயும் வரும் 25ம் தேதி நார்வேயில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
புலிகளுக்கும் அரசுக்கும் கடந்த செப்டம்பர் 16ம் தேதி தாய்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தைதொடங்கியதிலிருந்தே இந்த இருவரின் சந்திப்பு குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாலசிங்கமும் ரணிலும் சந்தித்துப் பேசுவார்கள்என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 31 முதல் கடந்த 3ம் தேதி வரை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், வரும் 25ம் தேதி இருவரும் நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் சந்தித்துப் பேசுவார்கள்என்று இலங்கை அரசியல் விவகாரத் துறை அமைச்சரான பெய்ரிஸ் கூறினார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக நிதி திரட்டும் பொருட்டு 25ம் தேதி ஓஸ்லோவில் ஒரு மாநாடுநடைபெற உள்ளது.
அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பாலசிங்கமும், ரணிலும் அங்கேயே சந்தித்துப் பேசவும் முடிவு செய்துள்ளனர்.இருவரும் தற்போது தான் முதல் முறையாகச் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவரின் சந்திப்பு பேச்சுவார்த்தைகளின் போக்கை மேலும் ஒரு படி முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக பாலசிங்கம் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடற்புலிகளும் இலங்கை கடற்படை அதிகாரிகளும் சமீபத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர். வடக்கு-கிழக்கு கடல் பகுதிகளில் அமைதியாக மீன் பிடி தொழிலை மேற்கொள்வது தொடர்பாகஅவர்கள் பேச்சு நடத்தினர்.
இதற்கிடையே கொழும்பில் இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் ஆலோசகருமான லட்சுமண் கதிர்காமர், இலங்கை அரசு புலிகளுக்கு அளவுக்குஅதிகமாக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், பேச்சுவார்த்தைகளால் புலிகளுக்கு மட்டுமே நிறையபலன்கள் கிடைக்கும் என்றும் அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications