நாகப்பா கடத்தல்: ஜெயாவை சந்திக்க கர்நாடக அமைச்சர்கள் ரெடி
சென்னை:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மீட்பு விவகாரம் தொடர்பாகமுதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க 2 அமைச்சர்கள் சென்னை வரத் தயாராக உள்ளதாக கர்நாடக அரசு கடிதம்அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் ரவீந்திரா எழுதியுள்ள கடிதத்தில்,
நாகப்பா மீட்பு தொடர்பாக தங்களிடம் பேச கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கல்விஅமைச்சர் சந்திரசேகர் ஆகியோரை சென்னைக்கு அனுப்ப கர்நாடக அரசு தயாராக உள்ளது.
எனவே தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ரவீந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கார்கேயும் இந்தத் தகவலை உறுதி செய்தார். கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா தலைமையில் இன்று காலை கூடிய உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகப்பா கடத்தல் விவகாரம் குறித்து இதுவரை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒரு தகவலும் தெரிவிக்கவில்லைஎன்று நேற்று தான் நிருபர்களிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா. கர்நாடக அரசு கேட்டுக் கொண்டால் நாகப்பாவைவிடுவிப்பதற்கு தமிழக அரசு உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயாவை சந்தித்த கர்நாடக காவல் அதிகாரி:
இந்நிலையில் கர்நாடக அதிரடிப்படையின் முன்னாள் தலைவரான சங்கர் பித்ரி இன்று காலை ஜெயலலிதாவைகோட்டையில் சந்தித்தார்.
தனது மகளின் திருமண அழைப்பை ஜெயலலிதாவிடம் கொடுத்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பித்ரி-முதல்வர் சந்திப்பின்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரும் உடன் இருந்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications