காவிரி: பிரதமரை தாக்கி பேசிய ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் சூடு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை தமிழக அரசு விமர்சிக்கக் கூடாது என்றும்அடுத்த 4 நாட்களுக்குள் இது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதங்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்து, காவிரியில் நீர்திறந்து விடாததற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே காவிரி ஆணையத்தைக் கடுமையாகத் தாக்கி வாஜ்பாய்க்கு கடந்த 5ம் தேதி ஜெயலலிதா கடிதம்ஒன்றை எழுதியிருந்தார்.
எதிர்காலத்தில் காவிரி ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொள்ள வேண்டுமானால் சில வரைவுத்திட்டங்களை ஆணையம் ஏற்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்த ஜெயலலிதா, அந்தத்திட்டங்களையும் அதில் பட்டியலிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி சபல்வால் மற்றும் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பேச்சு:
அப்போது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதிய விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது. அப்போதுகுறுக்கிட்ட நீதிபதிகள் கூறுகையில்,
பிரதமரைத் தமிழக அரசு கடுமையாக விமர்சனம் செய்து தெரிவித்துள்ள கருத்துக்கள் துரதிருஷ்டவசமானவை.அவற்றை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது.
காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இப்படிப் பொதுவாக அதைத் தாக்கிப் பேசியிருக்கக்கூடாது.
என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு இது ஒன்றும் உங்கள் வீட்டுப் பிரச்சனை அல்ல. தனிப்பட்ட ரீதியில்விருப்ப, வெறுப்புக்களைக் காட்ட நினைத்தாலும் அது இந்த இடத்தில் எடுபடாது என்பதை தமிழக முதல்வருக்குக்கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
காவிரி ஆணையத்துக்குத் தலைமை வகிக்கும் நாட்டின் பிரதமரையே இந்த அளவிற்கு விமர்சிப்பதுதேவையில்லாதது. அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற பெரும் பொறுப்பிலிருக்கும் ஜெயலலிதா இவ்வாறுபேசியிருக்கக் கூடாது.
அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்த விமர்சனங்களை தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைப்பொறுத்து தான் காவிரி ஆணையத்தை எப்போது கூட்ட வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவுசெய்யும்.
இப்படியெல்லாம் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால் காவிரி நதி நீர் ஆணையம் தவறேதும் செய்யவில்லை என்றுஅர்த்தம் கொள்ளக் கூடாது. அதுவும் தன்னுடைய சில கடமைகளிலிருந்து தவறியுள்ளது உண்மையே.
உரிய நேரத்தில் அவ்வப்போது ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அதைச்செய்யத் தவறி விட்டார் என்று நீதிபதிகள் கூறினர்.
அப்போது தமிழக அரசு வழக்கறிஞரான வேணுகோபால் எழுந்து, பிரதமரை தமிழக முதல்வர் எப்போதும்மதித்துக் கொண்டு தான் இருப்பதாகவும், நவமம்பர் 5ம் தேதி கடிதத்தில் உள்ள விமர்சனங்களை வாபஸ் பெறுவதுகுறித்து ஜெயலலிதா விரைவில் மீண்டும் வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்புவார் என்று கூறினார்.
இதையடுத்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் தெரிவிக்கும்வகையில் தமிழக அரசும் ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கைஒத்திவைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications