பெங்களூரில் சுந்தரா டிராவல்ஸ்களுக்கு தடை
பெங்களூர்:
பெங்களூரில் சுற்றுச் சூழல் மிக வேகமாக சீர்கெட்டு வருவதால் 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு தடை விதிக்க கர்நாடக அரசுமுடிவு செய்துள்ளது.
சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தவிர பிற போக்குவரத்து வாகனங்கள், வர்த்தகரீதியில் இயங்கும் 15ஆண்டு பழைய வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கவும் நகருக்குள் இயங்க தடை விதிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.
3 கட்டமாக இது நிறைவேற்றப்படும். 2003ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்குபெங்களூரில் தடை விதிக்கப்படும்.
2003ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 17 முதல் 20 ஆண்டுகள் வரை பழைய வாகனங்கள் தடை செய்யப்படும்.
2004ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி முதல் 15 ஆண்டு முதல் 17 ஆண்டுகள் வரை இயங்கிய பழைய வாகனங்கள் தடைசெய்யப்படும்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரில் இயங்கும் 20,000 வாகனங்கள் 20 ஆண்டுகள் பழையவை என்றும் 17 முதல் 20 ஆணடுகள் வரை பழையவாகனங்கள் சுமார் 16,000 உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல 15 முதல் 17 ஆண்டுகள் இயக்கப்பட்ட பழையவாகனங்கள் சுமார் 25,000 நகருக்குள் ஓடிக் கொண்டுள்ளன.
இந்த உத்தரவை மீறி பழைய வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பெங்களூரும் ஒன்று. மிக அதிகமான வாகனங்கள் உள்ளது தான் இதற்கு முக்கியக்காரணமாகும்.
பெங்களூரின் ஈரப்பதம் மிக்க தட்பவெப்ப நிலையில் கந்தகத்தை பழைய வாகனங்கள் வெளியேற்றும்போது உடல் நலம்பாதிக்கப்படுகிறது. கந்தகப் புகையும் ஈரப்பதமும் கலந்து வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் மிகப் பெரும் கேட்டைஏற்படுத்தி வருகின்றன.
இந்தத் தடையால் நகரின் காற்று ஓரளவுக்கு சீராகும் என்று எதிர்பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications