காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் சோதனை
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் பாபு திடீர் சோதனைநடத்தினார்.
சமீபத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்களின் அலட்சியம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணும்,சிறுமியும் இறந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிகள்முறையாக நடக்கிறதா என்பதைக் நேரில் பார்வையிட்டார் சந்தோஷ் பாபு.
நோயாளிகளையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பலரும் குறைபாடுகளை சுட்டிக் காட்டினர்.இதையடுத்து டாக்டர்களிடம் பேசிய கலெக்டர் உரிய சிகிச்சை தருமாறு உத்தரவிட்டார்.
அதே போல மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
கலெக்டரின் திடீர் வருகையால் அரசு மருத்துவ நிர்வாகம் பரபரப்படைந்தது.












Click it and Unblock the Notifications