தடையை மீறி யாத்திரை: வி.எச்.பி. தலைவர்கள் கைது
அகமதாபாத்:
கடந்த பிப்ரவரி மாதம் ரயில் எரிப்புச் சம்பவம் நடந்த கோத்ரா நகருக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றவிசுவ ஹிந்து பரிஷத் தலைவர்கள் பிரவீன் தொகாடியா மற்றும் ஆச்சார்ய தர்மேந்திர மகாராஜ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
விரைவில் குஜராத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த மதவாத யாத்திரைக்கு தலைமைத் தேர்தல் கமிஷன்சமீபத்தில் தடை விதித்தது.
தேர்தல் கமிஷனின் உத்தரவை மதிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயும் வி.எச்.பியை கேட்டுக் கொண்டார்.ஆனால் குஜராத் முதல்வரான நரேந்திர மோடியோ இந்த யாத்திரைக்கு முழு வரவேற்பு அளித்தார்.
இந்நிலையில் தடையை மீறி கோத்ராவுக்கு யாத்திரை செல்ல முயன்ற தொகாடியா நேற்று போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டார். இருந்தாலும் எப்படியும் யாத்திரையை நடத்தியே தீருவோம் என்று அவர் ஆவேசத்துடன்கூறினார்.
இதையடுத்து இன்று காலை கோத்ராவுக்கு யாத்திரை செல்வதற்கான சிறப்பு பூஜைகள் சோம்நாத் கோவிலில்வி.எச்.பி. சார்பில் நடத்தப்பட்டன.
இதன் பின்னர் தலைமைத் தேர்தல் கமிஷனர் மற்றும் பிரதமர் ஆகியோரை மோசமாகத் திட்டியவாறே வி.எச்.பி.தலைவர்கள் யாத்திரையைத் தொடங்க முயற்சித்தனர். இந்துக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை பிரதமரும்தேர்தல் கமிஷனரும் தூண்டி விட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் யாத்திரையின் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறிஅவர்கள் செல்ல முயன்ற போது, அவர்களைப் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் வி.எச்.பி.தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது.
தொகாடியாவின் மனைவி, மகள் ஆகியோரும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.
தொகாடியா, மகாராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வி.எச்.பி. தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீசாருக்கு எதிராக அங்கு கூடியுள்ள வி.எச்.பி.தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications