தமிழகத்துக்கு ரூ.228.3 கோடி வறட்சி நிவாரணம்: மத்திய அரசு ஒதுக்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்துக்கு ரூ.228.3 கோடி வறட்சி நிவாரண நிதியாக வழங்க என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் வறட்சி காரணமாக இந்த ஆண்டு கடுமையாகப்பாதிக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்தன.

இதைத் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் பல்வேறு குழுக்கள் நேரில் சென்றுஆய்வு செய்தன. அதன்படி 15 மாநிலங்களுக்கும் வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,997 கோடியை வழங்க இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்திலும் கடந்த செப்டம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் மத்திய அரசின் நிபுணர் குழுவினர் வறட்சியால்பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து ஆய்வு நடத்தினர். வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,434 கோடியும், 5.5லட்சம் டன் உணவு தானியமும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்கலந்து கொண்டு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் நிபுணர் குழுக்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் நிவாரணம்அளிப்பதற்காக மத்திய அரசின் உயர் நிலைக் கூட்டம் நேற்று துணைப் பிரதமர் அத்வானி தலைமையில்நடைபெற்றது.

நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், வேளாண் துறை அமைச்சர் அஜித் சிங், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாந்தகுமார்,உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சரத் யாதவ் மற்றும் திட்டக் கமிஷன் தலைவர் கே.சி. பந்த் ஆகியோர்இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய நிபுணர் குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த இந்தக் கூட்டத்தின் முடிவில், வறட்சி பாதித்த 15மாநிலங்களுக்கும் ரூ.1,997 கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.228.3 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டதொகையை விட இது ரூ.1,205.7 கோடி குறைவாகும்.

மேலும் தமிழக அரசு கேட்டிருந்த 5.5 லட்சம் டன் உணவு தானிய கோரிக்கை குறித்தும் மத்திய அரசுபரிசீலிக்கவில்லை. ஆனால் ராஜஸ்தானுக்கு 5 லட்சம் டன்னும், ஒரிசாவுக்கு ஒரு லட்சம் டன்னும் உணவு தானியம்வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+