மழை பாதிப்பு: சென்னையின் பல இடங்களில் வீடு கட்ட அனுமதி ரத்து?
சென்னை:
சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் இனிமேல் வீடு கட்டஅனுமதி வழங்க வேண்டாம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (சி.எம்.டி.ஏ.) சென்னைமாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேளச்சேரி, மடிப்பாக்கம்,கொரட்டூர், வியாசர்பாடி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் எங்கு பார்த்தாலும் தண்ணீராக உள்ளது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் குடியிருந்தோர் வீடுகளைக் காலி செய்து விட்டுச் செல்லும் நிலைஉருவாகியுள்ளது. பிளாட்டுகளை வாங்கியவர்கள், ரத்தக் கண்ணீர் விடாத குறையாக வருந்திக் கொண்டுள்ளனர்.
மேலும் இப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.காரணம், வேளச்சேரி ஏரிப் பகுதி மற்றும் பள்ளிக்கரணைப் பகுதியில் உள்ள கால்வாய்களை ஆக்கிரமித்துகுடிசைகள் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை அகற்றிய பிறகே தண்ணீர் செல்ல வழி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இது தவிர, இப்பகுதிகளில் தண்ணீர் வடிகால் வசதி சரியாக மேற்கொள்ளப்படாத நிலையில் குடியிருப்புகள்உருவாகி விட்டதால் சாதாரண மழை பெய்தால் கூட கடல் போல தண்ணீர் தேங்கும் சூழ்நிலை உள்ளதாகமாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் தற்போது உள்ள குடியிருப்புப் பகுதிகள் முன்பு விவசாயநிலங்களாக இருந்தவை. நகருக்குள் வீடு கட்ட, வாங்க இடம் இல்லாததால், இந்த நிலங்களை குடியிருப்புஇடங்களாக மாற்றி விட்டனர் ரியல் எஸ்டேட் முதலாளிகள். இதனால் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதைதவிர்க்கவே முடியாது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
விவசாய நிலங்களை வீடு கட்டும் இடங்களாக மாற்றி அனுமதி கொடுத்தது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமமம் தான் என்று கூறும் மாநகராட்சி நிர்வாகம், இனிமேலும் இந்தப் பகுதிகளில் வீடு கட்ட அனுமதிகொடுத்தால் மழைக் காலங்களில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கலைவாணன் கூறுகையில், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்றதாழ்வான பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யும் விதமாக சி.எம்.டி.ஏ.விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இதுதொடர்பாக குழு அமைத்து ஆலோசிக்கப்படும் என்றார்.
நிவாரணத்தை கவனிக்க 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்:
இதற்கிடையே சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கூடுதலாக 6 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் கலைவாணனுடன் இணைந்து இவர்கள் செயல்படுவார்கள். மொத்தமுள்ள 10மண்டலங்கள் இந்த அதிகாரிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜயக்குமார், அசோக் டோங்கரே, கனகராஜ், நிஜாமுதீன், டி.கே. ராமச்சந்திரன், பஷீர் அகமது ஆகியோர் தான்கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்.
இந்த ஆறு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் கலைவாணன், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர்தீனதயாளன் ஆகியோருடன் குடிநீர் விநியோகத் துறை செயலாளர் விஜயராகவன் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் தலைமையில் ஆலோசனை:
இதற்கிடையே சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனை ஊராட்சித் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் நடந்தது.
சென்னை-சைதாப்பேட்டையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை சம்பத் கேட்டுக் கொண்டார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications