பொடாவும், வைகோவும்: இளங்கோவன் நக்கல்
சென்னை:
பொடா சட்டத்தை தீவிரமாக ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, அதே சட்டத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவதிலிருந்தே அவரதுமுரண்பாடு தெளிவாகத் தெரிகிறது என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இன்று அவர் பேசுகையில்,
பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதிராவிடக் கட்சிகள் கண்மூடித்தனமாக பா.ஜ.கவை ஆதரித்து வந்தன.
ஆனால் அவர்களாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் போக்கைப் புரிந்து கொண்டு கூட்டணியை விட்டுவெளியே வந்து கொண்டிருக்கின்றன.
வைகோவும் அதே போல்தான், பொடா சட்டத்தை தீவிரமாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
ஆனால் இப்போது அதே பொடா சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்தச் சட்டத்தை மறுபரிசீலனைசெய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
இதிலிருந்தே அவரது முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் நிர்வாககள் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியலுடன் நானும், தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்ஆலோசனை நடத்தி பட்டியலை இறுதி செய்வோம்.
அனேகமாக இந்த வார இறுதிக்குள் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி விடும். நிர்வாகிகள் தேர்வு தொடர்பாகஎனக்கும், சோ.பாவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சோ.பா. பேசிவருகிறார். விரைவில் இதுதொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.
-->
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications