பிற மாநிலங்களால் விரும்பப்படும் தமிழக வேட்டி, சேலைகள்
நாகர்கோவில்:
தமிழக அரசின் மலிவு விலை வேட்டி, சேலை விற்பனை ரூ. 12.75 கோடியைத் தொட்டுள்ளதாக ஜவுளித்துறைஅமைச்சர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழக அரசின் மலிவு விலை வேட்டி, சேலைக்குதமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.
ரூ. 12.75 கோடிக்கு இந்த வேட்டி, சேலை விற்பனை நடந்துள்ளது. இதனால் 27,000 நெசவாளர் குடும்பங்கள்பிழைத்துள்ளன.
தமிழக அரசின் பட்டுச்சேலை விற்பனை இந்த ஆண்டு 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
இதற்கிடையே நெசவாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் பெறும் புதிய திட்டத்தை தமிழக அரசுஅறிகப்படுத்தியுள்ளது. இத் தகவலை கல்வி அமைச்சர் தம்பித்துரை தெரிவித்தார்.
தர்மபுரியில் அவர் கூறுகையில், நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தபயிற்சி பெற்றவர்கள் நவீன் எந்திரங்கள் மூலம் நெசவுத் தொழிலில் ஈடுபட ரூ. 5000 முதல் 5 லட்சம் வரைகடனுதவி தரப்படும்.
கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி சதவீதத்தைக் குறைப்பது குறித்து அரசு ஆலோசித்துவருகிறது என்றார் அவர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications