அமெரிக்க பல்கலைகளில் பெருகி வரும் இந்திய மாணவர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் அறிக்கையை இதன் தலைவர் ஆலன் குட்மேன்இன்று வெளியிட உள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2001-2002 கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான்.
மொத்தம் 66,836 இந்திய மாணவ, மாணவிகள் இங்கு உயர் கல்வி பயில்கின்றனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் இது 11.5சதவீதமாகும்.
இந்தியாவிலும் சீனாலும் உயர் கல்விக்கு போதிய இடங்கள் இல்லை. மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் கூட அரசிடம்போதிய நிதி வசதி இல்லை. இதனால் கல்விக்கு அதிக பணம் ஒதுக்கப்படுவதில்லை. ஆகவே உயர் கல்விக்காக வெளிநாடுகளை நாடும்இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம்அதிகரித்துள்ளது.
இது தவிர சர்வதேச அளவில் மிகப் பெரிய வேலைகளில் சேர அமெரிக்கக் கல்வியும் அமெரிக்க சான்றிதழ்களும் உதவும் என்பதால்இதற்கான போட்டி இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி மையங்களில் இடம் கிடைக்காதமாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடம் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகும் கூட அமெரிக்காவில் கல்விக் கூடங்களில் சேரும் இந்திய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைசிறிதளவும் குறையவில்லை.
அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் இந்திய ர்களிடையே உள்ள ஒரே கவலை விசா குறித்த கவலை தான்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை நாம் மிகப் பெரிய நாடு, வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதோடு மறந்துவிடுகிறோம். அங்கு மத்திய தர மக்களின்எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இந்த மக்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர் என்கிறார் சர்வதேச கல்வி மையத்தின்தலைவர் ஆலன் குட்மேன்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பிரிவு இந்த ஆய்வுக்கான நிதியுதவியை சர்வதேச கல்வி மையத்துக்குவழங்கியுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications