17 பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் தேர்வு எழுத கோர்ட் அனுமதி
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 17 பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள்வழக்கம் போல நடைபெறலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தேர்வுமுடிவுகளை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நிலச் சீர்திருத்த சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்று கூறி 17 பொறியியல் கல்லூரிகளைச்சேர்ந்த மாணவர்கள் தங்களது பி.இ. முதலாவது செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாது என்று அண்ணாபல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. மனுவைவிசாரித்த நீதிபதி பத்மநாபன், அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு சரியானது தான் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து மாணவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் இம்மனுவை விசாரித்தது.பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,
17 கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் வரும் வரும் 25ம் தேதி துவங்கும் தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும்.
இருப்பினும் அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும். நீதிமன்றத்தின் மறு உத்தரவுவரும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது.
கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பு கிடைக்குமானால், மாணவர்கள் எழுதிய தேர்வும் ரத்து செய்யப்படும்.
மேலும், மறு உத்தரவு வரும்வரை மற்றைய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாதுஎன்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications