தாயை அடித்த சித்தப்பாவை மிதித்தே கொன்ற வாலிபர்
சென்னை:
சென்னை அருகே தாயை அடித்துக் காயப்படுத்திய சித்தப்பாவை ஒரு வாலிபர் மிதித்தே கொன்று விட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி. இவரது மகன்களான 60 வயதுஜெயாவுக்கும், 55 வயது ஏழுமலைக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நலையில் ஜெயாவின் மனைவி சகுந்தலாவின் அக்காள் மகளுக்கும், பல்லி என்பவருக்கும் இடையே புட்லூர்என்ற இடத்தில் திருமணம் நடந்தது.
அப்போது அங்கு வந்த ஏழுமலை, ஜெயாவின் மகளைப் போய் கல்யாணம் செய்து கொண்டுள்ளாயே என்றுபல்லியைப் பார்த்து சப்தம் போட்டார். அப்போது அங்கு இருந்த சகுந்தலா, ஏழுமலையிடம் எனது கணவரை ஏன்திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சகுந்தலாவை ஏழுமலை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் அவமானமுற்ற சகுந்தலா வீட்டுக்கு வந்துதனது மகன் முத்துவிடம் நடந்ததைக் கூறினார்.
ஆத்திரமடைந்த முத்து வெகுண்டெழுந்தார். உடனடியாக சித்தப்பா ஏழுமலையின் வீட்டுக்குப் போனார். எனதுஅம்மாவையா அடித்தாய் என்று ஆவேசமாக கேட்ட முத்து, ஏழுமலையை கீழே தள்ளி காலால் பலமாகஉதைத்துள்ளார்.
பின்னர் ஆத்திரம் தீர ஏழுமலையை முத்து மிதி மிதியென்று மிதித்துத் துவைத்து விட்டார். இதில் படாத இடத்தில்பட்டு ஏழுமலை மூர்ச்சையானார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஏழுமலைஇறந்தார்.
ஏழுமலையின் மனைவி சலோமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் முத்துவைத் தேடி வருகிறார்கள்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications