பா.ம.க. தலைவருக்கு ஜாமீன் மறுப்பு: விரைவில் சரணடைவார்?
சென்னை:
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினரைத் தாக்கிய வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சிதலைவர் ஜி.கே. மணிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பி.டி. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்துஅறக்கட்டளை நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணி தலைமையில் ஒரு குழுவைசென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் பதவி ஏற்கச் சென்றபோது மணி மற்றும் காடுவெட்டி குரு என்ற எம்.எல்.ஏ.ஆகியோர் நீதிபதி தங்கமணி உள்ளிட்டவர்களைத் தடுத்து கலாட்டா செய்ததாகவும் அவர்களைத் தாக்கியதாகவும்கூறப்பட்டது.
இதையடுத்து மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் மீது வழக்குத்தொடரப்பட்டு அவர்களைக் கைது செய்யஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மணியும் காடுவெட்டி குருவும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் 9 தனிப் படைகள்அமைத்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணி மீதான புகார்களுக்குப் போதுமானஆதாரங்கள் உள்ளதால், முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
எனவே விரைவில் மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் ஏதாவது ஒரு கோர்ட்டில் சரணடைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications