திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஆஸ்திரேலிய கழுகுகள்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலையில் இருந்த கழுகுகள் காணாமல் போயுள்ள நிலையில்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதிதாக கழுகுக் குஞ்சுகளை வரவழைத்து அவற்றிற்குப் பயிற்சி கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்மலை. ரிக்,யஜூர், சாமம் மற்றும் அதர்வன வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு மலைக் குன்றுகள்இருப்பதால் இதற்கு வேதகிரீஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது.
திருக்கழுக்குன்றம் என்றாலே அங்கு தினந்தோறும் வரும் கழுகுகள் தான் அனைவரின் மனதிலும் தோன்றும். இந்தமலையில் பல நூற்றாண்டுகளாக இரண்டு வெள்ளை நிற கழுகுகள் தினசரி பகல் சரியாக 12 மணிக்கு கோவில்பிரசாதத்தை உண்பதற்காக வரும். பிரசாதத்தை உண்டவுடன் மலையை சுற்றிவிட்டு மறைந்துவிடும்.
கோவிலில் காணப்படும் இந்த வெள்ளை நிறக் கழுகுகளைக் காண்பதற்காகவே ஏராளமானோர் இங்கு வருகைபுரிந்தனர்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கழுகைக் காணவில்லை. சமீபத்தில் மற்றொரு கழுகையும் காணவில்லை.இரு கழுகுகளும் மிகவும் வயதானவை என்பதால் அவை இரண்டும் இறந்து போயிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
இவை தவிர வேறு கழுகுகளும் இங்கு வரவில்லை.
இந்த நிலையில் கழுகுகள் இல்லாத திருக்கழுக்குன்றம் களையிழந்து போனது. சுற்றுலாயப் பயணிகள் வருகையும்நின்று போனது.
இதையடுத்து மீண்டும் கழுகுகளை இங்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. ஆட்சித் தலைவர்ராஜாராமன் முயற்சியின் பேரில் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டு கழுகுக் குஞ்சுகளை கொண்டு வந்துஅவற்றிற்குப் பயிற்சி கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழுகுக் குஞ்சுகள் வந்த பிறகு மீண்டும் திருக்கழுக்குன்றம் பழைய பொலிவைப் பெறும் என்றுநம்பப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications