ஈ.பி.டி.பி. வெளியேற விடுதலைப் புலிகள் உத்தரவு
கொழும்பு:
வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி.)சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கெடு விதித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பகுதியில் புலிகள் அமைப்பினர் தங்களது அரசியல் பிரிவைக் கொண்டு வரும் வரை ஈ.பி.டி.பி.கட்சியினர் தான் கடற்படையின் உதவியுடன் இங்கு கிட்டத்தட்ட முழு ஆட்சி நடத்தி வந்தனர்.
இப்போது யாழ்பாணம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும்சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தங்களின் கோட்டையான யாழ்ப்பாண தீபகற்பத்தில் அனைத்துகட்சிகளும் அரசியல் நடத்த அனுமதிப்போம் என புலிகள் அறிவித்திருந்தனர்.
தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூட புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் அனைத்து கட்சிகளும் வந்து அரசியல் நடத்துவதை தாங்கள்விரும்புவதாகக் கூறினார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்ய புலிகள் தான் அனுமதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதுஎங்களுடைய உரிமை என்று ஈ.பி.டி.பி. தலைவரான டக்ளஸ் தேவானந்தா பேசி வருகிறார்.
இந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் சமீபத்தில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தை சிலர் கும்பலாக வந்து பயங்கரமாகத்தாக்கினர். இதில் அந்த அலுவலகம் பயங்கரமாகச் சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்நிலவியது. ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்கு புலிகள் தான் காரணம் என்று ஈ.பி.டி.பி. குற்றம் சாட்டியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டைபுலிகள் கடுமையாக மறுத்தனர்.
இதையடுத்து புலிகளுக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டதும், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 40 பேர் மீண்டும் நெடுந்தீவுக்கு வந்துசேதமடைந்த தங்கள் அலுவலகத்தைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு இலங்கைராணுவமும் கடற்படையும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் யாழ்ப்பாண தீபகற்பத்தை விட்டு ஈ.பி.டி.பியைச் சேர்ந்த அனைவரும்வெளியேறி விட வேண்டும் என்று புலிகள் கெடு விதித்துள்ளனர்.
புலிகளுளின் இந்த உத்தரவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மாணவர்களும், மீனவர்களும், அரசு ஊழியர்களும்இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அரசு அலுவலகங்கள், கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தை விட்டு ஈ.பி.டி.பியை வெளியேற்றியே தீர வேண்டும் என்று "சர்வதேச தமிழ் ஈழ மாணவர்கள்கூட்டமைப்பு" தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வேறு பல பொது அமைப்புகளும் இது போன்ற தீர்மானங்களைநிறைவேற்றியுள்ளன.
புலிகளின் முக்கிய எதிரியான ஈ.பி.டி.பி. யாழ்ப்பாண தீபகற்பத்திலேயே இருக்கக் கூடாது என்பதில் இவர்கள்அனைவரும் தீவிரமாக உள்ளனர்.
ஈ.பி.டி.பி. தேவையில்லாமல் குழப்பங்களை உருவாக்கி வருவதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சு.ப.தமிழ்ச் செல்வனும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் இலங்கையின் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலையிடவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இது புலிகளுக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையிலான அரசியல் விவகாரம், இதில் நாங்கள்தலையிடத் தேவையில்லை என்று அக்குழுவினர் தெரிவித்துவிட்டனர்.
இலங்கை அமைச்சர் இந்தியா வருகை:
இதற்கிடையே இலங்கையின் பொருளாதார சீரமைப்புத் துறை அமைச்சரான மிலின்டா மொரகோடா நாளைஇந்தியா வருகிறார்.
வரும் 25ம் தேதி நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில் இந்தியாவும்பங்கு பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே அவர் நாளை டெல்லி வருகிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தலைவர்களை மொரகோடா சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கான இந்தியாவின் தூதரான கோபாலகிருஷ்ண காந்தியையாவது இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்று இலங்கை அரசு முயன்று வருகிறது.
புலிகளுக்கு ஆதாயம் கிடைக்கும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை அதிபரானசந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணிக் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications