தனியார்வசமாகும் 50 சதவீத அரசு பஸ்கள்
சென்னை:
அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் 50 சதவீதத்தை தனியாருக்கு கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் நகர பஸ்களில் 50 சதவீதம் தனியாருக்குச்செல்கின்றன.
மேலும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த பஸ்களில் 50 சதவீதத்தையும் தனியாருக்குக் கொடுக்கமாநில அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்று ஏற்கனவே பஸ் ஊழியர்கள் போராடி வந்தனர்.
கடந்த ஆண்டு போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்திய போது, தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தையும்கடுமையாக எதிர்த்தனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.
ஆனால் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் கழகங்களின் நிலையைச் சரிக்கட்ட அவற்றை தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அரசு முடிவெடுத்தது.
பல மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது போக்குவரத்துக் கழகங்களில் 50சதவீதத்தை தனியார் மயமாக்கவுள்ளது.
அனைத்து பஸ் ரூட்களிலும் தனியாரின் பங்கு இருக்கும். அதே சமயத்தில், அவர்களின் முழுமையானஆக்கிரமிப்பு இருக்காத வகையிலும் பார்த்துக் கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பகிரங்க டென்டர் மூலம் இந்த ரூட்கள் தனியாருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் இதன் மூலம் கிடைக்கும்வருவாய் புதிய பஸ்களை வாங்கவும், பஸ் போக்குவரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications