தெஹல்கா ஊழலை விசாரிக்கும் நீதிபதி திடீர் ராஜினாமா
டெல்லி:
நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் தன் மீது சுமத்திய குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து தெஹல்கா ஆயுத பேரஊழலை விசாரித்து வந்த நீதிபதி வெங்கடசாமி அந்த விசாரணைக் கமிஷனின் தலைவர் பதவியை ராஜினாமாசெய்தார்.
கடந்த ஆண்டு துவக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா ஆயுத பேர ஊழல் தொடர்பாகவிசாரிப்பதற்காக நீதிபதி வெங்கடசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் தன்னுடைய விசாரணையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான நீதிபதி வெங்கடசாமிக்கு மத்திய சுங்க மற்றும் கலால்வரித் துறையின் தலைவர் பதவி சமீபத்தில் அளிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க் கட்சிகள் பலத்த ஆட்சேபம் தெரிவித்தனர். சமீபத்தில் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடரில் இது தொடர்பாக பெரும் அமளி கூட ஏற்பட்டது.
ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எப்படி இவ்வளவு பெரிய பதவியை அளிக்கலாம் என்று காங்கிரஸ்உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பின. நீதிபதி வெங்கடசாமி மீது பல்வேறுகுற்றச்சாட்டுக்களையும் அவை கூறின.
இதையடுத்து தெஹல்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை கமிஷனின் தலைவர் பதவியை நீதிபதிவெங்கடசாமி திடீரென்று ராஜினாமா செய்தார். எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுக்களால் நொந்து போயே அவர்இப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தான் ஏற்றுக் கொண்ட சுங்க மற்றும் கலால் வரித் துறையின் தலைவர் பதவியையும் நீதிபதிவெங்கடசாமி ராஜினாமா செய்து விட்டார்.
"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே நான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் குற்றச்சாட்டுக்களைஎழுப்பியுள்ளதால் இந்தப் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" என்று பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில்நீதிபதி வெங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ராஜினாமா முடிவை அவர் வாபஸ் பெற்றுக் கொள்வார் என்று மத்திய அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தன்னுடைய முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று நீதிபதி வெங்கடசாமிஇன்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கிடையே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான சோலி சொராப்ஜி இன்று மாலை நீதிபதிவெங்கடசாமியைச் சந்தித்து அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தேவையில்லாமல் நீதிபதி வெங்கடசாமிக்குப் புதிய பதவியைக் கொடுத்து, ஆயுத பேரஊழல் விசாரணையைத் திசை திருப்பிவிட முயற்சிப்பதாக தெஹல்கா இணைய தளத்தின் ஆசிரியர் தருண்தேஜ்பால் நிருபர்களிடம் கூறினார்.
"இந்த வழக்கு விசாரணையின் முடிவு எங்களுக்குச் சாதகமான சில முடிவுகளை அறிவிக்கவிருந்தது. ஆனால் இந்தப்பிரச்சனை காரணமாக நீதிபதி வெங்கடசாமி ராஜினாமா செய்துவிட்டார்.
இதனால் மத்திய அரசின் ஊழல் விவகாரங்கள் வெளியே வராது என்பதால் அது சந்தோஷப் படத்தான் செய்யும்"என்றும் தேஜ்பால் கூறினார்.
தெஹல்கா ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த விசாரணைக் கமிஷனின் காலம் வரும் ஜனவரி 31ம்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications