இன்று கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்புவழக்குகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்குகள்தொடர்பான தீர்ப்பை ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இம்மாதத் தொடக்கத்தில் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர்திறந்து விட்டது.
இதற்கிடையே காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் வாஜ்பாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம்செய்திருப்பதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இதையடுத்து தன்னுடைய விமர்சனக் கடிதத்தை ஜெயலலிதாவாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒழுங்காக நீரைத் திறந்துவிட்டுள்ளதா என்பதைக்கவனித்து வந்த காவிரி கண்காணிப்புக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
மத்திய நீர்வளத் துறை செயலாளரான ஏ.கே. கோஸ்வாமி தலைமையில் இன்று பிற்பகலில் இந்தக் கூட்டம்நடைபெறவுள்ளது.
தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையமும்கூடவுள்ளது.
இந்த இரண்டு கூட்டங்களிலும் ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கடந்த 22ம் தேதி கூறிய உச்சநீதிமன்றம், கிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்குகளின் இறுதித் தீர்ப்பை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குஒத்திவைத்துள்ளது நினைவிருக்கலாம்.
மேட்டூர் நீர்மட்டம் 61.05 அடி:
இதற்கிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61.05 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,047 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் விநாடிக்கு 2,082 கன அடி நீர்அங்கிருந்த வெளியேறிக் கொண்டிருக்கிறது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications