ரூ.1.5 கோடி மோசடி செய்த 2 ரியல் எஸ்டேட் அதிபர்கள் கைது
சென்னை:
புது வீடுகள் கட்டித் தருவதாக 22 பேரிடம் சுமார் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த 2 ரியல் எஸ்டேட்அதிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்த் பஜாஜ் மற்றும் அவருடைய மகன் ராஜேஷ் பஜாஜ் ஆகிய இருவரும்சென்னை-எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலையில் "பஜாஜ் ப்ரமோட்டர்ஸ்" என்ற வீடு கட்டும் கம்பெனியைத்தொடங்கி நடத்தி வந்தனர்.
இவர்கள் வேப்பேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறி 22 பேரிடம் சுமார்ரூ.1.5 கோடி வரை கறந்துள்ளனர்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரும் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
இதையறிந்து, பாதிக்கப்பட்ட அப்துல் பாஷா மற்றும் ராமச்சந்திர ரெட்டி ஆகிய இரண்டு பேர் சென்னையில் உள்ளகிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தலைமறைவான ஸ்ரீசந்த் பஜாஜையும், ராஜேஷ் பஜாஜையும் போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னைப்பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications